உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!

செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!


ஹிந்தியில் மோகித் சூரி இயக்கத்தில் கடந்த ஜூலை 18ம் தேதி திரைக்கு வந்த படம் ‛சாயாரா'. அஹான் பாண்டே, அனிட் பட்டா நடிப்பில் உருவான இந்த படத்தை யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படம் 50 நாட்களை கடந்து தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், 50 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் இதுவரை 576 கோடி வசூலித்துள்ளது. இந்த ஆண்டில் வெளியான காதல் படங்களில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது.

இந்நிலையில் இந்த சாயாரா படத்தை வருகிற செப்டம்பர் 12ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். குறிப்பாக ஆங்கில வசனங்களுடன் ஹிந்தியில் இப்படம் வெளியாகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !