உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 25வது நாளைக் கடந்த 'கூலி', வசூல் 600 கோடி கடந்திருக்குமா?

25வது நாளைக் கடந்த 'கூலி', வசூல் 600 கோடி கடந்திருக்குமா?


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியான படம் 'கூலி'. நேற்றுடன் இப்படம் 25வது நாளைத் தொட்டுள்ளது. செப்டம்பர் 11ம் தேதி இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரையில் குறைந்த தியேட்டர்களில் இப்படம் ஓடிக் கொண்டிருக்கும்.

இப்படத்திற்கான வசூல் அறிவிப்பு 404 கோடி என நான்காம் நாளில் வந்ததோடு அப்படியே நிற்கிறது. 500 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்கள். அது 600 கோடியைக் கடந்துள்ளதா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. படக்குழுவினர் வசூல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். நிறைவு வசூலையாவது அவர்கள் அறிவிப்பார்களா என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.

25வது நாள் போஸ்டர்களில் படத்தில் இடம் பெற்ற ரஜினியின் பிளாஷ்பேக் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளனர். 80களில் ரஜினி எப்படி இருந்தாரோ அப்படியான போஸ்டராக அது இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

என்றும் இந்தியன், Kolkata
2025-09-08 16:38:57

அப்போ 4 நாளில் ரூ 404 கோடின்னா 25 நாளில் குறைந்தது ரூ 2.500 கோடியாவது இருக்கணுமே


angbu ganesh, chennai
2025-09-09 09:59:35

இதென்ன வட நாயகன் படமா உண்மை நிலவரத்தை சொல்ராங்க