உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம்

பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம்

தமிழ், மலையாள படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நவ்யா நாயர். திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலானவர் தற்போது மீண்டும் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் ஓணம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா நகருக்கு சென்றிருந்தார்.

மெல்போர்ன் விமான நிலையத்தில் அவரது உடமைகளை பரிசோதனை செய்த அதிகாரிகள் அவரது கை பையில் பூ இருப்பதை கண்டுபிடித்தனர். ஆஸ்திரேலிய சட்டப்படி விமானத்தில் பூ கொண்டு செல்லக்கூடாது என்பதால் அவருக்கு ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து நவ்யா நாயர் கூறும்போது நான் விமானம் ஏறும்போது, என்னுடைய தந்தை தலையில் வைப்பதற்காக பூ வாங்கித் தந்தார். அதை இரண்டு துண்டுகளாக்கி ஒன்றை தலையில் வைத்து மீதமுள்ள பூவை நான் கைப்பையில் வைத்திருந்தேன்.

மெல்போர்ன் விமானநிலையத்தில் இறங்கிய பின்னர் என்னுடைய கைப்பையை சோதனையிட்ட அதிகாரிகள், பூ வைத்திருந்த குற்றத்திற்காக எனக்கு 1980 டாலர் (இந்திய மதிப்பில் 1.14 லட்சம் ரூபாய்) அபராதம் விதித்தனர். விமானத்தில் பயணம் செய்யும்போது கைப்பையில் பூ கொண்டு வரக்கூடாது என்பது இங்குள்ள சட்டம் என்று எனக்குத் தெரியாது.

வெறும் ஒரு முழம் பூவுக்காக எனக்கு இவ்வளவு ரூபாய் அபராதம் விதித்துவிட்டனர். தெரியாமல் செய்தாலும் தவறு தவறுதான். 28 நாட்களுக்குள் அபராதத்தை கட்ட வேண்டும் என்று அதிகாரிகள் என்னிடம் கூறியுள்ளனர். இதை நான் சொல்வதற்கு காரணம் மற்றவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

Balu1968, Doha
2025-09-09 07:00:58

பூ கொண்டுவருவது குற்றமில்லை. ஆனால் அதை பயண அட்டையில் (ஆஸ்திரேலியா நாட்டிற்கு வரும் அனைவரும் அப்படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும், ஆஸ்திரேலியா நாட்டு குடிகளுக்கும் இவ்விதி பொருந்தும்) செடி, கொடி, மலர், நாற்று, அதனைச்சார்ந்த உலர் கட்டைகளாயினும் ஆம் என்று அதனருகில் உள்ள கட்டத்தில் குறியிட வேண்டும். குறியிடவில்லை என்றால் மட்டும் தான் அபராதம் விதிக்கப்படுவர். குறியிட்டிருந்தால் அந்தப்பொருள் நாட்டிற்கு தீங்கு விளைவிக்காது என்று ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர், அப்பொருள் தீங்கு விளைவிப்பதாக கருதினால் அதை வாங்கி வைத்துக்கொள்வார்கள். முக்கியமாக இந்நாட்டிற்குள் வரும் அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்று என்னவென்றால், வருகைபுரியும் அனைவரும் பயணர் அட்டையில் உள்ள சரத்துகளை கவனமாக படித்து பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே


panneer selvam, Dubai
2025-09-08 22:22:14

yes . in australia , fresh flowers , food , fruits , veges not allowed . generally for first timer , they will be warned along with confiscation of goods . we do not how she bungled