உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம்

வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம்

இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரில் உலக புகழ்பெற்ற சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் 'தி வாய்ஸ் ஆப் ஹிந்த் ரஜப்' என்ற பெயரில் திரையிடப்பட்ட பாலஸ்தீனிய படம் உலக சினிமா வல்லுனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்தை கவுதர் பென் ஹனியா என்பவர் இயக்கியுள்ளார்.

பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்தாண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிந்த் ராமி இயாத் ரஜப் என்ற 5 வயது சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். இந்த சிறுமி கொலையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது.

இந்த படம் வெனிசில் திரையிடப்பட்டபோது பார்த்த அனைவருமே கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். அதோடு படம் முடிந்ததும் 23 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டினர். இந்த தொடர் கைதட்டல் சாதனையாக பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !