உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா

பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா

இப்போது கோர்ட் டிராமா என்கிற ஜார்னரில் அதிகமான திரைப்படங்களும், வெப்தொடர்களும் வருகின்றன. அந்த காலத்திய கோர்ட் டிராமா படம் என்றால் நமக்கு சிவாஜி நடித்த 'கவுரவம்', மோகன், பூர்ணிமா நடித்த 'விதி' படங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால் கோர்ட் டிராமாவும், பயங்கரமான திகில் கதையாகவும் வெளிவந்த படம் 'பவுர்ணமி அலைகள்'.

எம்.பாஸ்கர் இயக்கிய இந்தப் படத்தில் சிவகுமார், அம்பிகா, ரேவதி, மேஜர் சுந்தர்ராஜன், சிவச்சந்திரன், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தார்.

பெரிய தொழில் அதிபரான சிவச்சந்திரன் ஒரு பள்ளியில் சுதந்திரதின கொடியேற்றுவார் அப்போது அவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுவார். அவரை கொல்வது ரேவதி. கொன்று விட்டு நேராக போலீசுக்கு சென்று 'நான்தான் கொலை செய்தேன் இதோ துப்பாக்கி என்னை கைது செய்து சீக்கிரமே தூக்கிலிடுங்கள்' என்பார்.

இந்த நிலையில் அங்கு வரும் ரேவதியை வளர்ந்த பாதிரியார். 'அவரை நீங்கள் கைது செய்ய முடியாது அவர் உங்கள் ரிக்கார்ட் படி ஏற்கெனவே தற்கொலை செய்து கொண்டவர். இறந்த போன ஒருவரால் எப்படி இன்னொருவரை கொல்ல முடியும்' என்பார். இப்படியான இடியாப்ப சிக்கல் வழக்கை இளம் வழக்கறிஞரான சிவகுமார் எடுத்து நடத்தும்போது பல திடுக்கிடும் சம்பவங்கள் வரும், கடைசியில் தீர்ப்பு என்ன என்பதுதான் படத்தின் கதை.
படம் வெளியாகி பல தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது. படத்தில் ரேவதியின் நடிப்பு பரவலான பாராட்டுகளை பெற்றது. 1985ம் ஆண்டு இந்த படம் வெளியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !