உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 24 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ்!

24 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ்!

கடந்த 2001ம் ஆண்டில் சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, வடிவேலு, தேவையானி மற்றும் பலர் இணைந்து நடித்து வெளியான படம் 'ப்ரண்ட்ஸ்' . அந்த காலகட்டத்தில் இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. குறிப்பாக வடிவேலுவின் காமெடி இன்றளவும் பேசப்படுகிறது. சமீபகாலமாக பழைய படங்களை மீண்டும் வெளியிட்டு கல்லா கட்டி வருகின்றனர். அந்தவகையில் தற்போது 24 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் 4கே தொழில்நுட்பத்தில் ப்ரண்ட்ஸ் படத்தை மேம்படுத்தி விரைவில் உலகளவில் திரைக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர். இந்த படத்தை விநியோகஸ்தர் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !