மேலும் செய்திகள்
பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது
8 days ago
‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன்
8 days ago
அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர்
8 days ago
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்துள்ள படம் ' பிளாக் மெயில்'. மு.மாறன் இயக்கி உள்ளார். தேஜு அஸ்வின் நாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் பிந்து மாதவி நடித்துள்ளார். இப்படம் இந்தவாரம் செப்டம்பர் 12ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இதற்காக ஜி.வி.பிரகாஷ் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
ஒரு பேட்டியில் தனுஷ் படங்களுக்கு இசையமைக்கிறீர்கள். அவருடன் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதா என கேள்வி எழுப்பட்டது . அதற்கு ஜி.வி. பிரகாஷ் கூறியதாவது, ராயன் படத்தில் ஒரு தம்பி கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டார். ஆனால் அது அவரை முதுகில் குத்தும் கதாபாத்திரம் என்பதால் நண்பர் உடன் அப்படி எப்படி நடிக்க முடியும் என வேண்டாம் கூறினேன். இதற்கு நேரடியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிச்சிடலாம். எதிர்காலத்தில் இணைந்து நடிக்கலாம் என தெரிவித்ததாக கூறியுள்ளார்.
8 days ago
8 days ago
8 days ago