2022ல் கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் ‛காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவாகி ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ‛காந்தாரா சாப்டர் 1' உருவாகி வருகிறது. இது காந்தாரா படத்தின் முந்தைய கதைகளத்தில் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. வரும் அக்டோபர் 2ம் தேதியன்று படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் மாநில வாரியாக படத்தின் வியாபாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் தமிழக தியேட்டர் வியாபார உரிமை நடந்து முடிந்துள்ளதாம். சுமார் 33 கோடிக்கு படத்தின் விநியோகம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.