மேலும் செய்திகள்
200 கோடியை நெருங்கும் 'லோகா'
5 minutes ago
ரஜினி, கமல் இணையும் கதை இதுதானா?
5 minutes ago
சந்தானம் நடித்த 'பாரிஸ் ஜெயராஜ்' படத்தின் இறுதி காட்சியில் சந்தானம் கானா பாடல் பாடும் போது அப்பாடலில் வந்து நடனம் ஆடியவர் தேஜு அஸ்வினி. தமிழில் 'கல்யாண சமையல் சாதம் ' என்கிற வெப் சீரியலிலும் இவர் நடித்துள்ளார். கவின் நடித்த ஆல்பம் பாடலான 'அஸ்க்குமாரோ' வீடியோவில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வம் கொண்ட இவர், 'என்ன சொல்லபோகிறாய்' படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் கால்பதித்தார். தற்போது மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் 'பிளாக்மெயில்' படத்தில் நடித்துள்ளார். செப்டம்பர் 12ல் படம் ரிலீசாகிறது.
இந்த நிலையில் தேஜூ அஸ்வினி அளித்த பேட்டி: எதிர்பாராத விதமாகத்தான் நான் சினிமாவுக்கு வந்தேன். சினிமா விளம்பரம் சார்ந்த ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்து கொண்டிருந்தபோது, ஒரு குறும்படம் நடித்தேன். பின்னர் மாடலிங் செய்து வந்தேன். அதன்பின்னர் சினிமாவுக்கு வந்தேன்.
பொருளாதார சூழலும், என் கனவும் சேர்ந்தது தான் சினிமா பயணம். என் வாழ்க்கை தரத்தை உயர்த்தியது இந்த சினிமாதான். அப்படிப்பட்ட சினிமாவுக்கு என்றும் உண்மையாக இருப்பேன். பல படங்கள் நடித்த பிரபலங்களுக்கு கூட கிடைக்காத ரசிகர்களும், ஆதரவாளர்களும் எனக்கு கிடைத்திருப்பது என் அதிர்ஷ்டம். அதனை கடவுள் எனக்கு கொடுத்த பரிசாக பார்க்கிறேன். காதல் படங்கள் போல ஆக்ஷன் கதாபாத்திரங்களிலும் நடிக்க விரும்புகிறேன். காலமே எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும். இவ்வாறு அவர் கூறினார்.
5 minutes ago
5 minutes ago