உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர்

அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர்

தமிழில் ‛ஓ மை கடவுளே, டிராகன்' போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் அஸ்வத் மாரிமுத்து. இவர் அடுத்து இயக்கவுள்ள சிம்புவின் 51வது படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இருவரையும் திடீரென இவர் சந்தித்து பேசி உள்ளார்.

அதுதொடர்பான போட்டோக்களை சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டுள்ளார். அதோடு, உண்மையாகவே நீங்கள் ஒரு ஐகான் மற்றும் ஒரு சிறந்த மனிதர். என் பணிக்கான அன்பு, அரவணைப்பு மற்றும் உங்களின் பாராட்டு அனைத்திற்கும் நன்றி அல்லு அர்ஜூன், இன்னும் நிறைய அர்த்தம் கொண்ட சந்திப்பாக அமைந்தது. இனிமையான நண்பராகவும், சிறந்த மனிதராகவும் இருப்பதற்கு நன்றி தேவி ஸ்ரீ பிரசாந்த் என குறிப்பிட்டுள்ளார் அஸ்வத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !