ரீ ரிலீஸ் ஆகும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'
ADDED : 106 days ago
கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே வெளியாகி பாராட்டுகளை பெற்ற படம் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'. விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், அபிஹாசன், அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, ரித்விகா, நாசர், கே எஸ் ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா மற்றும் அனுபமா குமார் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். இந்த படம் செப்டம்பர் 19ல் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த பட இயக்குனர் விஷால் வெங்கட் இயக்க, அர்ஜூன்தாஸ் நடித்த 'பாம்' படம் நாளை (செப்.,12) வெளியாக உள்ள நிலையில், அடுத்த வாரமே அவர் இயக்கிய படம் ரிலீஸ் ஏன்? வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறாத படம் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'. அப்படி இருக்க, செப்டம்பர் 19ல் ரீ ரிலீஸ் செய்ய காரணம் என்ன? ஏதாவது அரசியலா? என்ற கேள்வி எழுந்துள்ளது.