உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரவி மோகன், யோகி பாபுவின் ‛ஆன் ஆர்டினரி மேன்' புரொமோ வெளியீடு

ரவி மோகன், யோகி பாபுவின் ‛ஆன் ஆர்டினரி மேன்' புரொமோ வெளியீடு

ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் நடிகர் ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். இதில் மூன்று படங்கள் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு படத்தை அவரே இயக்குகிறார். இந்த படத்திற்கு ‛ஆன் ஆர்டினரி மேன்' என பெயரிட்டுள்ளார். இதில் யோகிபாபு ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் புரொமோ வீடியோவை ரவி மோகன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர். படத்தின் அறிவிப்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இப்படத்தின் ப்ரோமோ ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகம் சேர்த்துள்ளது.

இப்படத்தில் ஜெய் சாரோலா ஒளிப்பதிவு செய்ய, ஹைட்ரோ இசை அமைக்கிறார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப குழுவின் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !