உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜப்பானிய பாரம்பரிய உடை அணிந்து ஜப்பான் சாலைகளில் வலம் வந்த மஞ்சு வாரியர்

ஜப்பானிய பாரம்பரிய உடை அணிந்து ஜப்பான் சாலைகளில் வலம் வந்த மஞ்சு வாரியர்

நடிகை மஞ்சு வாரியர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை மலையாள திரையுலகிலேயே தனது நடிப்பு எல்லையை நிறுத்திக் கொண்டிருந்தார். அசுரன் படம் மூலமாக தமிழிலும் கால் பதித்த அவர் தொடர்ந்து இங்கேயும் முன்னணி நடிகர்களுடன் வெற்றி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் பிறந்தநாள் வந்தது. அதேசமயம் அந்த நேரத்தில் அவர் ஜப்பானில் ஜாலியாக பொழுது போக்கிக் கொண்டு இருந்தார். ஆம் படப்பிடிப்பிலிருந்து சில நாட்கள் இடைவெளி கிடைத்ததால் ஜப்பான் கிளம்பிச் சென்றார் மஞ்சு வாரியர்.

அங்கே தனது பிறந்த நாளன்று ஜப்பானிய பாரம்பரிய உடையான கிமோனோ என்கிற ஆடையை அணிந்து கொண்டு ஜப்பான் சாலைகளில் வலம் வந்ததுடன் அங்கிருந்த கடைகளுக்கும் சென்று தனக்கு வேண்டிய பொருட்களை வாங்கியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு தனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் மஞ்சு வாரியர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !