வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி
ADDED : 13 days ago
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்தில் நடித்த பிறகு நாகசைதன்யாவுக்கு ஜோடியாக தண்டேல் என்ற தெலுங்கு படத்தில் நடித்த சாய் பல்லவி, தற்போது ஹிந்தியில் ஏக் தீன் என்ற படத்தை முடித்துவிட்டு ராமாயணா படத்தின் முதல் பாகத்தை அடுத்து இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 49 வது படத்தில் சாய் பல்லவி நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வடசென்னை கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் கேங்ஸ்டர் வேடத்தில் சிம்பு நடிக்கும் நிலையில் சாய் பல்லவியும் வடசென்னை பெண்ணாக சென்னை தமிழ் பேசி தர லோக்கலாக இறங்கி நடிக்கிறாராம்.