உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி'

‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி'

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகி வருகிறது ‛பராசக்தி'. இதில் ரவிமோகன் வில்லனாக நடிக்க, முக்கிய வேடங்களில் அதர்வா, ஸ்ரீலீலா நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இப்படம் 2026, ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹந்தி என 4 மொழிகளில் ரிலீஸ் செய்கின்றனர்.

பொங்கலுக்கு வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படமும் ஜன., 9 ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவாரம் கழித்து சிவகார்த்திகேயன் படம் வெளியாகிறது. இதனால் ஜனநாயகன் படத்தின் தியேட்டர்கள் குறைக்கப்படும். இது நிச்சயம் ஜனநாயகன் படத்திற்கு வசூல் ரீதியாக பாதிப்பையே ஏற்படுத்தும்.

பராசக்தி படத்தை திமுக குடும்பத்தை சேர்ந்த ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க, இன்பன் உதயநிதி பொறுப்பில் இருக்கும் ரெட் ஜெயண்ட் ரிலீஸ் செய்கிறது. இதனால் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீசுக்கு செக் வைக்கப்பட்டுள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கருப்பு இந்த போட்டியில் கலந்து கொள்ளுமா? பின் வாங்குமா என்பது போகபோக தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

BHARATH, TRICHY
2025-10-21 19:03:57

ஜனநாயகம் அவ்வளவுதான்


Naga Subramanian, Kolkatta
2025-09-17 17:25:52

பராசக்தி , டாஸ்மாக் பணத்தில் தயாரித்த படம் என நினைக்கிறேன்.