உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரச்சனை முடிந்து திரைக்கு வந்தது 'தணல்'

பிரச்சனை முடிந்து திரைக்கு வந்தது 'தணல்'

ரவிந்தர மாதவா இயக்கத்தில், அதர்வா, அஷ்வின் காகுமனு, லாவண்யா த்ரிபாதி மற்றும் பலர் நடித்த 'தணல்' படம் நேற்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று பகல் காட்சிகள் வரை இப்படம் வெளியாகவில்லை.

இப்படத்திற்காகத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து சுமார் மூன்றரை கோடி ரூபாயை பைனான்சியருக்குத் தராமல் இருந்துள்ளார்கள். அது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. நேற்று மதியம் வரை இது குறித்து பேச்சுவார்த்தை நடந்து ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. அதன்பின் இரவுக் காட்சிக்கு படம் வெளியானது. அதர்வா நடித்து இந்த வருடம் வெளிவந்த 'டிஎன்ஏ' படம் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது. அதர்வா நடித்து அடுத்து 'பராசக்தி' படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

நேற்று வெளியாவதாக அறிவிக்கப்பட்ட 10 படங்களில் கடைசி நேரத்தில் 'அந்த 7 நாட்கள், தாவுத்' ஆகிய படங்கள் தள்ளி வைக்கப்பட்டது. நேற்றைய வெளியீடுகளுடன் இந்த வருடத்தில் இதுவரையில் வெளியான படங்களின் எண்ணிக்கை 190ஐ நெருங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !