உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : விஜய்க்கு 6 வயது... ஷோபாவை 2வது முறை திருமணம் செய்த எஸ்.ஏ.சந்திரசேகர்

பிளாஷ்பேக் : விஜய்க்கு 6 வயது... ஷோபாவை 2வது முறை திருமணம் செய்த எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் துணை இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் ஷோபா வீட்டில்தான் வாடகைக்கு குடியிருந்தார். ஷோபாவை காதலித்தார், காதலுக்கு அவரது பெற்றோரின் அனுமதியையும் பெற்றார்.

சிவாஜி நடித்த 'பட்டாக்கத்தி' பைரவன் படத்தில் ராஜேந்திர பிரசாத்திடம் உதவி இயக்குனராக வேலை செய்து கொண்டிருந்தார் எஸ்ஏ சந்திரசேகர். அப்போது அவர் சிவாஜியிடம் நான் சோபாவை காதலிக்கிறேன் உங்கள் தலைமையில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார். கமலா அம்மாள் தாலி எடுத்துக் கொடுக்க ஷோபாவை திருமணம் செய்து கொண்டார் சந்திரசேகர்.

மறு ஆண்டில் விஜய் பிறந்தார். ஷோபா கேட்டு கொண்டதற்காக கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் அவரை திருமணம் செய்தார் எஸ்ஏ சந்திரசேகர். அந்த சமயம் விஜய்க்கு 6 வயது. நுங்கம்பாக்கத்தில் உள்ள சர்ச் ஒன்றில் இவர்களின் திருமணம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Anand, chennai
2025-09-15 10:29:33

இதெல்லாம் ஒரு நியூஸா?