உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : டீ கடையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹீரோயின்

பிளாஷ்பேக் : டீ கடையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹீரோயின்

இந்தியாவில் சினிமா வந்தபோது மவுன படங்கள் காலத்திலும், ஆரம்பத்தில் சில காலம் வரையிலும் பெண்கள் வேடத்தில் ஆண்களே நடித்து வந்தார்கள். 1913ம் ஆண்டு இந்திய சினிமாவின் தந்தை என்று போற்றப்படும், தாதா சாகேப் பால்கே 'ஹரிச்சந்திரா' படத்தை எடுக்கும்போது அதில் ஒரு பெண்ணை நடிக்க வைத்தே தீருவது என்று கருதி நாடு முழுக்க சென்று தேடினார். யாரும் கிடைக்கவில்லை.

இதனால் மனம் வெறுத்த அவர் மும்பை ரயில் நிலையத்தில் இறங்கி வெளியே வந்தபோது அங்கு சாலையோரத்தில் கை நிறைய வளையல் அணிந்த ஒரு பெண் டீ விற்றுக் கொண்டிருந்தாள். அவளை பார்த்ததுமே அவள்தான் தனது ஹீரோயின் என்று முடிவு செய்தார். பின்னர் அவளுடனும், அவளுடைய குடும்பத்துடனும் பேசி சம்மதிக்க வைத்தார் அவர்தான் அன்னா ஹரி சலுங்கே. இந்திய சினிமாவின் முதல் ஹீரோயின்.

அதன்பிறகு பல படங்களில் நடித்தார். ஒளிப்பதிவின் மீது ஆர்வம் கொண்ட அவர் சில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் ஆனார்.

'லங்கா தகன்' என்ற படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி இரு வேடங்களிலும் நடித்ததன் மூலம், இந்திய சினிமாவில் இரட்டை வேடத்தில் நடித்த முதல் நபர் என்ற பெருமையையும் சலுங்கே பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !