21ம் தேதி நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : 55 days ago
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69வது பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வருகிற 21ம்தேதி (ஞாயிற்றுகிழமை) சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
சங்க தலைவர் நாசர் தலைமையில் நடக்கும் இந்தப் பொதுக்குழுவிற்கு பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் முன்னிலை வகிக்கிறார்கள்.
நடிகர் சங்கத்தின் தேர்லை நடத்துவது, சங்க கட்டட பணிகளை விரைந்து முடிப்பது, திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த், பார்லி., உறுப்பினரான கமல்ஹாசன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்துவது உள்ளிட்டவைகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.