3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்'
கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, ரித்திகா நாயக், மஞ்சு மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படம் 'மிராய்'. இப்படம் முதல் நாளில் 27 கோடியும், இரண்டாவது நாளில் 55 கோடியும், மூன்றாவது நாளில் 81.2 கோடியும் வசூலித்துள்ளது. அடுத்த சில நாட்களில் 100 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கு தெலுங்குத் திரையுலகத்திலிருந்து பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள். இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் என பலரது பாராட்டுக்களும் இப்படத்திற்கு ரசிகர்களை மேலும் வரவழைத்துள்ளது. ஹிந்தியிலும் முதல் நாளை விட அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரித்துள்ளது.
ஆன்மிகம் கலந்த படங்களுக்கு இந்திய ரசிகர்கள் பெரும் வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர். இதற்கு முன்பு வந்த அனிமேஷன் படமான 'மஹாவதார் நரசிம்மா' படம் 300 கோடி வசூலைக் கடந்தது. அது போல இந்தப் படத்திற்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. வசூலும் 100 கோடியைக் கடந்து 200 கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.