ஓடிடி : முதலிடத்தில் 'சாயரா', இரண்டாமிடத்தில் 'கூலி'
ADDED : 54 days ago
இந்தியத் திரையுலகத்தில் ஜுலை மாதம் வெளிவந்த ஹிந்திப் படமான 'சாயரா', கடந்த மாதம் வெளிவந்த 'கூலி' ஆகிய இரண்டு படங்களும் கடந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகின. அந்த இரண்டு படங்களில் 'சாயரா' படம் கடந்த வார இறுதியில் மட்டும் 5.5 மில்லியன் பார்வைகளையும், 'கூலி' படம் 4.7 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளன.
'கூலி' படப் பார்வைகளை விடவும் 'சாயரா' படப் பார்வைகள் அதிகமாக உள்ளன. 'கூலி' படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டுமே ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. ஹிந்தி மொழியில் எட்டு வாரங்களுக்குப் பிறகே வெளியாகும். ஹிந்தியும் வெளியாகி இருந்தால் அது 'சாயரா' பார்வைகளை மிஞ்சி முதலிடத்தைப் பிடித்திருக்கும்.
'சாயரா' மற்றும் 'கூலி' ஆகிய இரண்டு படங்களுமே தியேட்டர் வசூலில் 600 கோடியை நெருங்கிய படங்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.