ஆஸ்பத்திரியில் ரோபோ சங்கர் : அவர் உடல்நிலை எப்படி இருக்கிறது
காமெடி நடிகரான ரோபோ சங்கர், சென்னை துரைப்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்னாச்சு என்று விசாரித்தால், சில ஆண்டுகளாகவே அவர் உடல்நிலையில் பிரச்னைகள் ஏற்பட்டது. பல கட்ட ட்ரீட்மென்ட்டுக்குபின் உயிர் பிழைத்து வந்தார். இனி, ஒழுக்கமாக இருக்க வேண்டும். உணவு விஷயத்தில் கவனம் தேவை என்று டாக்டர்கள் எச்சரித்தனர். அவரும் அதை கேட்டு நல்லபடியாக இருந்தார்.
ஆனால் இப்போது மீண்டும் அவர் உடல்நிலையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்குமுன்பு நடந்த ஒரு பட பூஜைக்கு வந்தவர், அன்று மாலை வாந்தி எடுத்துள்ளார். அதில் அவருக்கு சில பிரச்னைகள் நடக்க, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், இன்னொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரின் உணவு குழாய், சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள். ஆனால், அவர் குடும்பத்தினரோ உடல் சோர்வு காரணமாக அவர் ட்ரீட்மென்ட் எடுத்து வருகிறார். வேறு ஒன்றும் பிரச்னை இல்லை என்கிறார்கள்.