உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது

மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், விக்ராந்த், சபீர் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் மதராஸி. அனிருத் இசையமைத்த இந்த படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வந்தது. கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் 80 கோடி வசூலித்துள்ளது. ஆனால் தற்போது கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள லோகா படம் ரசிகர்களை கவர்ந்திருப்பதால் மதராஸி படத்தின் வசூல் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற அக்டோபர் மூன்றாம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் மதராஸி படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !