அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர்
ADDED : 48 days ago
தமிழில் மண்டேலா, குருதி ஆட்டம், கூலி, கைதி, லவ்வர் போன்ற படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் கண்ணா ரவி. ஏற்கனவே இவர் ரத்தசாட்சி எனும் வெப் தொடரில் நடித்திருந்தார். தற்போது கண்ணா ரவி நடிப்பில் அடுத்த வெப் தொடரும் ஒளிபரப்பாகிறது. பவன் இயக்கத்தில் கண்ணா ரவி, சஞ்சீவ் வெங்கட், ஸ்ராவினிதா, ஸ்ரீ காந்த், ஐஸ்வர்யா ரகுபதி, வினுஷா தேவி, லாவண்யா, ரேகா நாயர், பார்வதி, ஜீவா ரவி உள்ளிட்டோர் இணைந்து இந்த வெப் தொடரில் நடித்துள்ளனர். இதற்கு 'வேடுவன்' என தலைப்பு வைத்துள்ளனர். இந்த வெப் தொடரை ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளனர். இந்த வெப் தொடர் வருகின்ற அக்டோபர் 10ம் தேதியன்று ஜீ 5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது என அறிவித்துள்ளனர்.