உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'நுாறுசாமி' படத்தில் அம்மாவாக சுஹாசினி

'நுாறுசாமி' படத்தில் அம்மாவாக சுஹாசினி


சசி இயக்கத்தில் விஜய்ஆண்டனி நடிக்கும் 'நுாறுசாமி' படத்துக்கும், இவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த 'பிச்சைக்காரன்' படத்துக்கும் கதை ரீதியாக தொடர்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. பிச்சைக்காரன் படம் அம்மா சென்டிமென்ட் பேக்கிரவுண்டில் உருவானது. அம்மாவுக்காக ஒரு கோடீஸ்வரன் ஏன் பிச்சை எடுக்கிறான் என்பதே படத்தின் கரு.

நுாறுசாமி படமும் கிட்டத்தட்ட அம்மா சென்டிமென்டில் தயாராகிறது. அதனால்தான் 'நுாறுசாமிகள் இருந்தாலும் அம்மா உன்போல் ஆகிடுமா' என்ற பாடலின் வரியை தலைப்பாக வைத்து இருக்கிறார்கள். பிச்சைக்காரன் படத்தில் தீபா ராமானுஜம் அம்மாவாக நடித்தார். நுாறுசாமிகள் படத்தில் சுஹாசினி அம்மாவாக வருகிறார். இவரை தவிர 'லப்பர் பந்து' ஸ்வாசிகா, லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார்கள். விஜய் ஆண்டனியுடன் அவர் அக்கா மகனான அஜயும் நடிக்கிறார். அம்மா சென்டிமென்ட் தவிர, அண்ணன், தம்பி பாசமும் இருக்க வாய்ப்பு என்கிறார்கள் கோலிவுட்டில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !