உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி இதோ

இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி இதோ

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் 'இட்லி கடை'. டான் பிக்சர்ஸ், வுண்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அக்டோபர் 1ம் தேதியன்று இப்படம் திரைக்கு வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது. தற்போது அடுத்தகட்டமாக இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவை வருகின்ற செப்., 20ம் தேதியன்று கோவையில் உள்ள மால் ஒன்றில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த விழாவில் தனுஷ் கலந்து கொள்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் தீவிரமாக புரொமோஷனில் கலந்து கொள்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !