சரோஜாதேவி பெயரில் விருது: கர்நாடக அரசு அறிவிப்பு
ADDED : 52 days ago
இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததைப்போன்று சரோஜாதேவி பெயரில் விருது வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி கன்னட திரைத்துறையில் 25 ஆண்டுகள் சேவையாற்றிய பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படும் என்றும், இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கம், 100 கிராம் வெள்ளி பதக்கம் வழங்கப்பட உள்ளது. இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட உள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சரோஜாதேவிக்கு கன்னட ரத்னா விருதை அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.