காந்தாரா சாப்டர் 1க்கு டப்பிங் பேசிய ருக்மணி வசந்த் : செப்., 22ல் டிரைலர் ரிலீஸ்
ADDED : 52 days ago
கன்னட நடிகையான ருக்மணி வசந்த் தமிழில் விஜய் சேதுபதி நடித்த ஏஸ் என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படத்தில் நடித்தவர், தற்போது கன்னடத்தில் காந்தாரா சாப்டர் -1, டாக்ஸிக், தெலுங்கில் டிராகன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா சாப்டர் 1 என்ற படத்தில் கனகவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ருக்மணி வசந்த், தனக்கான டப்பிங்கை பேசி முடித்து விட்டதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். மேலும், இன்று இந்த காந்தாரா சாப்டர்-1 படத்தின் டிரைலர் செப்டம்பர் 22ஆம் தேதி பிற்பகல் 12. 45 மணிக்கு வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி திரைக்கு வருகிறது .