உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரூ.100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் மதராஸி

ரூ.100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் மதராஸி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித் யூத் ஜம்வால், பிஜு மேனன், சபீர், விக்ராந்த் ஆகியோர் நடித்து கடந்த ஐந்தாம் தேதி திரைக்கு வந்த படம் மதராஸி. அனிருத் இசையமைத்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும், திரைக்கு வந்த இரண்டாவது நாளில் 50 கோடி வசூலித்திருந்தது. இந்த நிலையில் இப்படம் திரைக்கு வந்து 14 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் முதன்முதலாக நெல்சன் இயக்கிய டாக்டர் படம் 100 கோடி வசூலித்த நிலையில், அதன் பிறகு சிபி சக்ரவர்த்தி இயக்கிய டான் படமும் 100 கோடி வசூலித்தது. பின்னர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அவர் நடித்த அமரன் படம் 300 கோடி வசூலித்திருந்த நிலையில், தற்போது மதராஸி படம் 100 கோடி வசூலித்து இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !