சென்னையில் மழை : படகு சவாரி கேட்ட பூஜா ஹெக்டே
ADDED : 53 days ago
ரெட்ரோ படத்தை அடுத்து ரஜினியின் கூலி படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடிய பூஜா ஹெக்டே, தற்போது விஜய்யுடன் ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். லாரன்ஸ் உடன் காஞ்சனா-4 படத்தில் நடித்து வருகிறார். இதனால் அடிக்கடி மும்பையில் இருந்து சென்னைக்கு அவர் பயணித்துக் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் சென்னையில் பெய்த பலத்த மழையால் சென்னை விமான நிலையத்துக்கு அவர் செல்லும் போது சாலைகள் எல்லாம் மழை வெள்ளத்தில் மூழ்கின. பூஜா ஹெக்டே விமானத்தை பிடிப்பதற்கு வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைக் கடந்து சென்றுள்ளார். அப்போது தனது காரின் பின்பகுதியில் இருந்தபடி தான் எடுத்த வீடியோவை வெளியிட்டு, விமான நிலையத்துக்கு ஒரு விரைவான படகு சவாரி வேண்டும் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார் பூஜா.