5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல்
நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் விஜய் ஆண்டனியின் ‛சக்தித்திருமகன்', கவின் நடித்த ‛கிஸ்', அட்டக்கத்தி தினேஷின் ‛தண்டகாரண்யம்', படையாண்ட மாவீரா மற்றும் திரள், ராயல் சல்யூட் ஆகிய 5 படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் எந்த படத்துக்கும் நல்ல ஓபனிங் கிடைக்கவில்லையாம். சொல்லிக் கொள்ளும்படி வசூல் நிலவரம் இல்லையாம்.
இதில் கிஸ் படத்துக்கு மட்டும் ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ளது. அது பிக்அப் ஆகுமா என்பது வரும் நாட்களில் தெரியவரும். விஜய் ஆண்டனி படத்துக்கும், மற்ற படங்களுக்கும் பெரியளவில் வரவேற்பு இல்லை. அடுத்த வாரம் சாந்தனு நடித்த பல்டி, மற்றும் கயிலன், கிஸ் மீ, டாக்டர் 420, ரவாளி உள்ளிட்ட படங்கள் வருகின்றன.
விஜய் நடித்த குஷி ரீ ரிலீஸ் ஆகிறது. அக்டோபர் 1ல் தனுஷின் இட்லி கடை வருவதால், அந்த படத்தை இன்பன் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் ரிலீஸ் செய்வதால், தியேட்டர் கிடைக்காது என்ற காரணத்தால் பல படங்கள் அடுத்தவாரம் வரவில்லை. தமிழில் கல்யாணியின் லோகா, சிவகார்த்திகேயனின் மதராஸி படங்கள் ஓரளவு ஓடுகின்றன.