உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முக்குத்தி அம்மன் 2 கிளைமாக்ஸ் : சென்டிமென்ட் ஆக குஷ்பு ஆடுகிறாரா?

முக்குத்தி அம்மன் 2 கிளைமாக்ஸ் : சென்டிமென்ட் ஆக குஷ்பு ஆடுகிறாரா?

நயன்தாரா, மீனா, ரெஜினா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2வை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. படத்தின் பெரும்பகுதி எடுக்கப்பட்ட நிலையில், கிளைமாக்ஸ் காட்சி சென்னை ஈசிஆர் பகுதியில் எடுக்கப்படுகிறது. பொதுவாக சுந்தர். சி எடுக்கும் பக்தி படங்களில், பேய் படங்களில் கிளைமாக்ஸ் பெரிய செட் அமைக்கப்பட்டு, திருவிழாவாக இருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் பின்னணியில் பாடல் காட்சியுடன் அது நடக்கும்.

அதில் குஷ்பு ஆடுவார். இந்த படத்தில் குஷ்பு ஆடுகிறாரா? அவருடன் நயன்தாரா, மீனா, ரெஜினா இணைந்து ஆடுகிறார்களா? அரண்மனை 4ல் சிம்ரன் சிறப்பு தோற்றத்தில் வந்து டான்ஸ் ஆடியதை போல, வேறு யாரும் ஆடுகிறார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. இதுவரை சுந்தர்.சி எடுத்த படங்களை விட, பெரிய பட்ஜெட்டில் மூக்குத்தி அம்மன் 2 எடுக்கப்படுகிறது. தமிழ் தவிர, மற்ற மொழிகளிலும் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !