ஜனநாயகன் படத்தில் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கலாம் : சொல்கிறார் வினோத்
வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ஜனநாயகன். இப்படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். விஜய்யின் கடைசி படம் என்பதால் ஜனநாயகனுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
ஒரு விழாவில் ஜனநாயகன் படம் குறித்து இயக்குனர் எச்.வினோத் கூறுகையில், இது ஒரு பக்கா பேர்வெல் படம். மாஸ், கமர்சியல், ஆக்ஷன் இந்த மூன்றும் கலந்த படமாக இருக்கும். அந்த வகையில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு கம்ப்ளீட் மீல்ஸ் கொடுத்து இருக்கிறேன். அவர்கள் தியேட்டருக்கு தங்களது வழக்கமான எதிர்பார்ப்புடன் வரலாம் என்று தெரிவித்திருக்கிறார் வினோத்.
வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரும் இந்த படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், டிசம்பர் மாதம் இறுதியில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.