உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'இட்லி கடை, ஓஜி, காந்தாரா 1' - அடுத்தடுத்து வெளியாகும் டிரைலர்கள்

'இட்லி கடை, ஓஜி, காந்தாரா 1' - அடுத்தடுத்து வெளியாகும் டிரைலர்கள்


2025ம் வருடத்தின் கடைசி மூன்று மாதங்களை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம். இந்த வருடத்தில் அடுத்து மூன்று மாதங்களில் தென்னிந்திய மொழிகளில் சில பெரிய படங்கள் வெளியாக உள்ளன. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள அப்படங்கள் வசூல் சாதனைகளைப் படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் சில முக்கிய படங்களின் டிரைலர்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக உள்ளது.

நேற்று தனுஷ் இயக்கிய நாயகனாகவும் நடித்துள்ள 'இட்லி கடை' தமிழ்ப் படத்தின் டிரைலர் வெளியானது. அடுத்து பவன் கல்யாண் நடித்துள்ள 'ஓஜி' தெலுங்குப் படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது. நாளை ரிஷப் ஷெட்டி நடித்துள்ள 'காந்தாரா சாப்டர் 1' படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது.

'இட்லி கடை' படம் அக்டோபர் 1ம் தேதியும், 'ஓஜி' படம் செப்டம்பர் 25ம் தேதியும், 'காந்தாரா சாப்டர் 1' படம் அக்டோபர் 2ம் தேதியும் வெளியாக உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !