கவர்ச்சி உடைகளுக்கு வரும் விமர்சனம் குறித்து கவலை இல்லை! - நடிகை வேதிகா
ADDED : 49 days ago
நடிகை வேதிகா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும், இவரால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை.
தற்போது வேதிகா அளித்த பேட்டியில் அவரிடம் கவர்ச்சி குறித்து வரும் விமர்சனங்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு அவர் கூறியதாவது, நடிகைகள் கவர்ச்சியாக உடை அணிந்தால் போதும் 'அப்படியா' என பரபரப்பாக பேச தொடங்கி விடுவார்கள். உடைகளை அணிவது வைத்து நடிகைகளை விமர்சிக்கும் போக்கு இன்னும் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். நானும் அவ்வப்போது பிகினி உடைகளை அணிகிறேன். இந்த விமர்சனங்கள் குறித்து எந்தவொரு கவலையும் எனக்கு இல்லை. இவ்வாறு கூறினார்.