மலையாளத்தில் அறிமுகமாவதை உறுதிபடுத்திய டிஎஸ்கே!
சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களின் மூலம் பிரபலமானவர் டிஎஸ்கே. ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் . ஆனால், அவருக்கு லப்பர் பந்து படத்தில் நடித்த பிறகு பல வாய்ப்புகள் தேடி வருகிறது.
சமீபத்தில் டிஎஸ்கே அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, லப்பர் பந்து படத்தில் எனது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பும் முதன்முறையாக என்னை தேடி வந்தது. மலையாளத்தில் 'விலாயத் புத்தா' என்கிற படத்தில் நடிகர் பிரித்விராஜ் உடன் இணைந்து, அவரது நண்பராக கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஜெயன் நம்பியார் இந்த படத்தை இயக்கியுள்ளார். மலையாள படம் என்றாலும் இந்த படத்தில் நான் தமிழ் பேசும் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளேன். என்னுடைய நடிப்பை பார்த்து பாராட்டியதுடன் மலையாள திரையுலகிற்கு உங்களை வரவேற்கிறேன் என ஆட்டோகிராப் போட்டும் தந்தார் பிரித்விராஜ். என தெரிவித்துள்ளார்.