உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பெரிய ஹீரோகளின் புதுப்படங்கள் வரல : பழைய படங்கள் ரீ ரிலீஸ்

பெரிய ஹீரோகளின் புதுப்படங்கள் வரல : பழைய படங்கள் ரீ ரிலீஸ்

எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடித்த குஷி படம், செப்டம்பர் 25ல் ரீ ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை யாரித்த எம்.ஏ.ரத்னம், கடந்த ஆண்டு கில்லியை வெளியிட்டார். அது லாபம் சம்பாதிக்க, இந்த ஆண்டு குஷியை வெளியிட உள்ளார். அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடித்த ரன் படத்தையும் ரீ ரிலீஸ் செய்ய உள்ளார்.

இந்தியன், பாய்ஸ், துாள், தில், எனக்கு 20 உனக்கு 18 ஆகிய படங்களும் ஏ.எம்.ரத்னம் தயாரித்த படங்களே. இந்த படங்கள் அடுத்தடுத்து ரீ ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. எஸ்.தாணு சச்சின் படத்தை ரீ ரிலீஸ் செய்தார். அந்த பட வரவேற்பை தொடர்ந்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காக்க காக்க படங்கள் படங்கள் மீண்டும் வர உள்ளன.

அஜித்தின் அமர்களம் அடுத்தமாதம் மீண்டும் ரிலீஸ் ஆகிறது. தீபாவளிக்குபின் அட்டகாசமும் ரீ ரிலீஸ் ஆகிறது. அடுத்த சில மாதங்கள் பெரிய ஹீரோக்களின் படங்கள் அதிகம் வராத காரணத்தால், பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்கிறார்கள். சமீபத்தில் வெளியான விஜயகாந்த்தின் கேப்டன் பிரபாகரன் வெற்றி பெற்றதால், விஜயகாந்த் நடித்த சில படங்களை மீண்டும் வெளியிட பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !