உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினியின் ‛மனிதன்' அக்டோபர் 10ம் தேதி ரீ ரிலீஸ்

ரஜினியின் ‛மனிதன்' அக்டோபர் 10ம் தேதி ரீ ரிலீஸ்

1987ம் ஆண்டு வெளிவந்து 25 வாரங்கள் தியேட்டரில் ஓடி வெற்றி பெற்ற படம் ரஜினிகாந்த் நடித்த மனிதன். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி உடன் சோ, வினு சக்கரவர்த்தி, ரூபிணி, ரகுவரன், செந்தில், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ், மற்றும் பலர் நடித்தனர். ஏவிஎம் தயாரித்தது. சந்திர போஸ் இசையில் இதில் இடம்பெற்ற ‛‛மனிதன் .... மனிதன்..., வானத்த பாத்தேன்..., காளை... காளை..., ஏதோ நடக்கிறது ...., முத்து முத்து பெண்ணே...'' ஆகிய பாடல்கள் ஹிட்டாகின.

ரஜினிகாந்த் சினிமாவில் பொன்விழா ஆண்டினை கொண்டாடி வருகிறார். அவருடைய ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வதற்கு மனிதன் திரைப்படத்தினை டிஜிட்டல் முறையில் மாற்றி 38 ஆண்டுகள் கழித்து, வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி ரிலீஸ் செய்கிறார்கள். குரு ராஜா இண்டர்நேஷனல் நிறுவனம் மனிதன் படத்தை இப்போது ரிலீஸ் செய்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

KayD, Mississauga
2025-09-22 20:21:54

kuppai padam


BHARATH, TRICHY
2025-09-24 12:26:24

மொக்க படத்துக்கு பெயர் போனவன் ஜோசப்.