புதியவர் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக்
ADDED : 49 days ago
நடிகர் கவுதம் ராம் கார்த்திக் கைவசம் ‛கிரிமினல், மிஸ்டர் எக்ஸ்' உள்ளிட்ட 3 படங்கள் உள்ளன. இப்போது புதிதாக சின்னசாமி பொன்னையா என்பவர் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நாயகனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு துவங்கி உள்ளது. யுவன் இசையமைக்கிறார். கேஆர்ஜி கண்ணன் ரவியின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை தீபக் ரவி இணைந்து தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் துவங்கி தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி மற்றும் காஷ்மீர் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. ஆக் ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகிறது. படம் குறித்த மற்ற அறிவிப்புகள், கதாநாயகி, முக்கிய நடிகர்கள் பட்டியல், தொழில்நுட்பக் குழுவின் முழுமையான விவரங்கள் விரைவில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.