சூர்யா 46வது படத்தில் அம்மா வேடத்தில் ராதிகா சரத்குமார்!
ADDED : 94 days ago
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ரெட்ரோ' படத்தை அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் 'கருப்பு' என்ற படத்தில் நடித்துள்ள சூர்யா, தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் தனது 46வது படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் சூர்யாவின் அம்மாவாக நடிக்கும் ராதிகா சரத்குமாரும் அப்படத்தில் இணைந்திருக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், ராதிகாவும்- சூர்யாவும் அம்மா மகனாக நடிக்கும் சென்டிமெண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சூர்யா 46வது படத்தில் பாலிவுட் நடிகை ரவீனா டான்டனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.