உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழில் வெளியாகும் புதிய அனகோண்டா

தமிழில் வெளியாகும் புதிய அனகோண்டா


ராட்சத மலைப்பாம்பை மையமாக கொண்டு 1997ம் ஆண்டு வெளியான 'அனகோண்டா' படம் பெரிய வெற்றி பெற்றது. இதன் பிறகு இதே கதை களத்தை கொண்டு பல படங்கள் வெளிவந்தது. தற்போது முன்பு வெளியான படத்தின் தொடர்ச்சியாக அதே பெயரில் தற்போது புதிய படம் ஒன்று தயாராகி உள்ளது.

டாம் கோர்மிகன் இயக்கி இருக்கும் இந்தப் படம், டக் (ஜாக் பிளாக்) மற்றும் கிரிப் (பால் ரூட்) ஆகிய இருவரையும் மையமாகக் கொண்டு நகர்கிறது. நீண்ட கால நண்பர்களான இருவரும் தங்களுக்குப் பிடித்த ஜங்கிள் மூவியை மீண்டும் உருவாக்கத் திட்டமிடுகிறார்கள். ஆனால் ஒரு ராட்சத அனகோண்டா அவர்களின் ஆர்வத்தை முறியடிக்கிறது.

இதனால், இருவரும் திரைப்படம் எடுப்பதை விட அமேசான் காடுகளில் உயிர் பிழைத்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.

ஸ்டீவ் ஜான், தாண்டிவே நியூட்டன், டேனிலா மெல்ச்சியர் மற்றும் செல்டன் மெல்லோ ஆகியோரும் நடித்துள்ளனர். பிராட் புல்லர், ஆண்ட்ரூ பார்ம், கெவின் எட்டன் மற்றும் டாம் கோர்மிகன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

வருகிற டிசம்பர் 25ம் தேதி ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. சோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !