ஆயிரம் கோடி டார்கெட்டில் காந்தாரா
ADDED : 48 days ago
கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த ‛காந்தாரா' படம் எப்படி வெற்றியை கொடுத்தது என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. காந்தாராவின் அடுத்த பாகமான காந்தாரா சாப்டர் 1, அக்டோபர் 2ல் வெளியாகிறது. கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வருகிறது. இந்த படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். மதராஸியில் அவருக்கு ஜோடியாக நடித்த ருக்மிணி தான் இதில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஹீரோவுக்கு காக்காமுட்டை மணிகண்டன் தமிழ் டப் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
காந்தாரா 2 படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கன்னடம் தவிர, மற்ற மொழிகளிலும் படக்குழு படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். சென்னைக்கும் காந்தாரா படக்குழு வர உள்ளது.