வாசகர்கள் கருத்துகள் (1)
துருவ் விக்ரம் படம் என்று கூறாமல் ரஞ்சித் படம் என்று சொல் நல்லா ஓடும் படம்
இந்த ஆண்டு தீபாவளிக்கு துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் பைசன், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டியூட் மற்றும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே), ஹரிஷ் கல்யாணின் டீசல் ஆகிய படங்கள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளன. பிரதீப் ரங்கநாதனின் ஒரு படம் பின்வாங்கும் என தெரிகிறது.
முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வராதநிலையில், இன்னும் சில படங்கள் தீபாவளிக்கு களம் இறங்க யோசிக்கின்றன. ஏற்கனவே சமுத்திகனி, கவுதம் மேனன் நடித்துள்ள கார்மேனி செல்வம் படம் தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது லேட்டஸ்ட்டாக கம்பி கட்ன கதை என்ற படமும் தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜாநாதன் பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் நட்டி, சிங்கம்புலி, சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் தவிர இஷாக் உஷைனி நடிக்கும் பூகம்பகம் என்ற படம் ரிலீஸ் ஆவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
துருவ் விக்ரம் படம் என்று கூறாமல் ரஞ்சித் படம் என்று சொல் நல்லா ஓடும் படம்