உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / யுவன் சங்கர் ராஜா இசை சுற்றுப்பயணம்

யுவன் சங்கர் ராஜா இசை சுற்றுப்பயணம்

தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர்கள் மேடை இசை நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒரு காலத்தில் மேடை இசை நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்த இளையராஜாவே இப்போது மேடை நிகழ்ச்சிகளை ஏராளமாக நடத்துகிறார்.

தற்போது யுவன் சங்கர் ராஜா ' தி யு1நிவர்ஸ் ' என்ற இசைச் சுற்றுப்பயணத்தை சென்னையிலிருந்து உலக நாடுகள் வரை நடத்துகிறார். அதன்படி டிசம்பர் 13ம் தேதி சென்னை நந்தனம் ஒய் எம்சிஏ மைதானத்தில் அவரின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதை தொடர்ந்து பாரீஸ், மலேசியா, துபாய் என பல்வேறு வெளிநாடுகளில் உள்ள இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !