தமிழக அரசு நேற்று 90 பேருக்கு கலைமாமணி விருது அறிவித்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் திரைத்துறையினர். இவர்களின் எஸ்.ஜே.சூர்யா, லிங்குசாமி உள்ளிட்ட பலர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். பாடகி ஸ்வேதா மோகன் பேசுகையில், ''எனக்கு விருது கிடைத்தது மகிழ்ச்சி. ஆனால், என் அம்மாவும் பாடகியுமான சுஜாதா மோகனுக்கு இன்னமும் தேசியவிருது கிடைக்கவில்லையே என்ற கவலை உள்ளது. பலமுறை அது கடைசி நேரத்தில் கூட கை விட்டு போனது'' என்ற கவலையை தெரிவித்து இருக்கிறார்.
ஆனால், சாய்பல்லவி போன்றவர்கள் இன்னமும் விருது அறிவிப்பு பற்றி சோஷியல் மீடியாவில் கூட எந்த கருத்தும் பதிவிடவில்லை. 'கார்கி, அமரன்' போன்ற தமிழ் படங்களில் அவருக்கு நல்ல பெயர் என்றாலும், அவர் தெலுங்கிலேயே இப்போது கவனம் செலுத்துகிறார். தமிழில் வழக்கமான ஹீரோயின் கதைகளில் நடிக்க மறுக்கிறார். தனக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே பெரிய ஹீரோ படமென்றால் கூட ஓகே சொல்கிறார். மற்ற ஹீரோயின்களில் இருந்து அவர் தனித்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் அவருக்கு நண்பர்களும் குறைவு. அவரை சினிமாகாரர்களே எளிதில் தொடர்பு கொள்ள முடியவில்லை. சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளில் கூட அதிகம் தலை காண்பிப்பது இல்லை'' என்கிறார்கள்.