உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினி, கமல் மாதிரி தனுஷ், சிம்பு இணைகிறார்களா?

ரஜினி, கமல் மாதிரி தனுஷ், சிம்பு இணைகிறார்களா?


மதுரையில் நடந்த 'இட்லிகடை' பட நிகழ்ச்சியில் 'வடசென்னை 2' படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும், அதற்கு அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார் தனுஷ். சென்னையில் நடந்த இந்த படவிழாவில்தான் 'வடசென்னை 2'வில் தனுஷ் நடிக்கிறார், நான் தயாரிக்கிறேன் என்று ஐசரி கணேஷ் அறிவித்தார்.

இதனால், வட சென்னை 2 உறுதி ஆகியுள்ளது. இதற்கிடையில் வடசென்னையின் இன்னொரு கிளைக்கதையை சிம்புவை வைத்து இயக்க உள்ளனர். அந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும். அதற்கடுத்து ஆண்டு வடசென்னை 2 வெளிவரும். வடசென்னை 3யில் தனுசும், சிம்புவும் இணைந்து நடிக்க வாய்ப்பு. அதற்கான திட்டமும் இருக்கிறது.

ரஜினியும், கமலும் இணைந்து நடிக்க உள்ளதுபோல், தனுசும், சிம்பு இணைகிறார்கள். விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் கமலுடன், சூர்யா இணைகிறார். பாலிவுட் பாணியில் தமிழிலும் முன்னணி ஹீரோக்கள் இணைந்து படம் பண்ண இருக்கிறார்கள். இது தமிழ் சினிமாவுக்கு புதுசு என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !