மேலும் செய்திகள்
சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
5 days ago
மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி
5 days ago
கடந்த 2008ம் ஆண்டில் கலா பிரபு இயக்கிய சக்கரகட்டி என்ற படத்தில் அறிமுகமானவர் சாந்தனு. அதன் பிறகு தனது தந்தையான இயக்குனர் கே.பாக்யராஜ் இயக்கிய சித்து பிளஸ்-2 என்ற படத்தில் நடித்தார். ஆனால் முதல் படத்தைப் போலவே இரண்டாவது படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. அதன்பிறகு நடித்த படங்களும் ஏமாற்றத்தை கொடுத்தன. தற்போது ப்ளூ ஸ்டார் படத்தை அடுத்து பல்டி என்ற படத்தில் நடித்து வருகிறார் சாந்தனு. இந்த படம் தமிழ், மலையாளத்தில் உருவாகி வருகிறது.
சாந்தனு கூறுகையில், ‛‛நான் நடித்த படங்கள் தோல்வியடைந்ததால் பெரிய அளவில் பட வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை. அதனால் தற்போது சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி , மணிகண்டன் ஆகியோரை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு அவர்கள் பாணியில் அடி மட்டத்திலிருந்து வளர வேண்டும் என்று உழைக்க தொடங்கி இருக்கிறேன். சினிமாவில் எந்தவித பின்புலமும் இல்லாமல் தன்னிச்சையாக வெற்றி பெற்ற இந்த நடிகர்களை போன்று எனது தந்தையின் பெயரை முன் நிறுத்தாமல் தனிப்பட்ட முறையில் பட வாய்ப்புகள் பெற்று அடுத்த கட்டமாக செயல்பட திட்டமிட்டுள்ளேன்'' என்கிறார் சாந்தனு.
5 days ago
5 days ago