ஏஐ தொழில்நுட்பத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சன்னி லியோன்
ADDED : 8 days ago
நடிகை சன்னி லியோனுக்கு அறிமுகம் தேவை இல்லை. ஒரு காலத்தில் நீலப்பட நடிகையாக இருந்து பின்னர் சினிமாவில் நுழைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடுபவராக பிரபலமான இவர் சமீப காலமாக சில படங்களில் கதையின் நாயகியாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது ஹிந்தியில் நடித்து வரும் படம் கவுர் Vs கோர்.
இந்த படத்தில் சன்னி லியோன் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒரு கதாபாத்திரம் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கதைப்படி இரண்டு கதாபாத்திரங்களில் ஒன்று சூப்பர் உமன் கதாபாத்திரமாகவும் மற்றொன்று ஏஐ சக்தி கொண்ட அவதாரமாகவும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தை வினில் வாசு என்பவர் இயக்குகிறார். இந்த வருட இறுதியில் அல்லது வரும் ஜனவரியில் இந்த படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது...