உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜெய் ஹனுமான்' படம் : ரிஷப் ஷெட்டி தந்த அப்டேட்

'ஜெய் ஹனுமான்' படம் : ரிஷப் ஷெட்டி தந்த அப்டேட்

கன்னடத் திரையுலக நடிகரான ரிஷப் ஷெட்டி 'காந்தாரா' படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். அந்தப் படத்தின் முன்பாகமான 'காந்தாரா சாப்டர் 1' படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாக உள்ளது. அந்தப் படத்தின் புரமோஷனுக்காக அவர் அளித்த பேட்டி ஒன்றில் அடுத்த நடிக்க உள்ள 'ஜெய் ஹனுமான்' படம் பற்றிய அப்டேட் ஒன்றைக் கொடுத்தார்.

“காந்தாரா : சாப்டர் 1 வெளியாகும் வரை எந்தப் படத்திலும் கமிட் ஆக விரும்பவில்லை. ஆனால் பிரசாந்த் வர்மாவின் ஸ்கிரிப்ட்டைக் கேட்ட பிறகு, உடனடியாக 'ஜெய் ஹனுமான்' படத்தில் கையெழுத்திட்டேன். பிரசாந்த் வர்மா ஒரு அற்புதமான ஸ்கிரிப்ட்டுடன் வந்தார், கதை மிகவும் சுவாரஸ்யமானது. நாங்கள் போட்டோஷூட்டை முடித்துவிட்டோம், ப்ரீ-ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் ஜெய் ஹனுமான் படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்குவதற்கான தேதியை நிர்ணயிப்போம்” என்றார்.

பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடித்து கடந்த வருடம் வெளிவந்த தெலுங்குப் படமான 'ஹனுமான்' 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !