உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மோகன்லாலுக்கு விருது கிடைத்ததை கொண்டாடிய திரிஷ்யம் படக்குழு

மோகன்லாலுக்கு விருது கிடைத்ததை கொண்டாடிய திரிஷ்யம் படக்குழு

சினிமா பிரபலங்களில் நடிகர் ரஜினிகாந்த்தை தொடர்ந்து சமீபத்தில் மலையாள நடிகர் மோகன்லாலுக்கு இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு திரையுலகில் இருந்தும் ரசிகர்களிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

தற்போது அவர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் திரிஷ்யம் 3 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்பில் கலந்து கொள்ள வருகை தந்த மோகன்லாலுக்கு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். திரிஷ்யம் 3 படத்தின் கதாநாயகியான மீனா மோகன்லாலுக்கு சால்வை அணிவித்து தனது வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !